ஆயக்காட்டூர் குப்பை கிடங்கில் திடீர் தீ
ஆயக்காட்டூர் குப்பை கிடங்கில் திடீர் தீ
நாமக்கல்
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஆயக்காட்டூர் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு ஆலாம்பாளையம் பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்தது. மர்மநபர்கள் சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து சென்றதாக தெரிகிறது. குப்பைகள் அதிகளவில் இருந்ததால் கரும்புகையுடன் தீ எரிந்தது. மேலும் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு அவதியடைந்தனர். பின்னர் பொதுமக்கள் ஒன்றிணைந்து தீயை அணைத்தனர்.
Related Tags :
Next Story