போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வாலிபர் கைது


போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வாலிபர் கைது
x
திருப்பூர்


காங்கயத்தில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்கு போலீஸ்காரர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார். இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ்காரர் மோட்டார் சைக்கிளுக்கு தீவைப்பு

குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காங்கயத்தில் கடந்த வாரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த சாம்பவலசை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது31) என்பவரது வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும் புதிய மோட்டார் வாகன சட்டப்படி ரூ.10 ஆயிரம் கோர்ட்டில் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்து செல்ல அறிவுறுத்தி உள்ளனர்.

வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட முடியாததாலும் மன உளைச்சலில் தமிழ்செல்வன் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு காங்கயம் பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் முன்பாக போலீஸ்காரர் ரமேஷ் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனாலும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

வாலிபர் கைது

புறக்காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ்காரர் வாகனம்தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ்காரர் வாகனத்திற்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட தமிழ்செல்வன் வந்து தீ வைப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தமிழ்செல்வனை அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் கடந்த வாரத்தில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்ததற்காக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாலும், அபராதம் விதித்ததாலும், அபராதம் கட்டி திரும்ப எடுக்கமுடியாத காரணத்தால்குடிபோதையில் தீ வைத்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story