பென்னாகரத்தில் அறுவடை செய்த நெல்லுக்கு தீ வைப்பு
தர்மபுரி
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே உள்ள கூத்தபாடியை சேர்ந்தவர் குப்பன் (வயது 60). இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அங்கு உள்ள தானிய களத்தில் அறுவடை செய்த நெல்லை வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று மர்ம நபர்கள் அந்த தானிய களத்திற்கு தீ வைத்தனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து பென்னாகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி ரகுபதி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story