தர்மபுரியில் சிலிண்டரில் கியாஸ் கசிவால் வீட்டில் திடீரென தீப்பிடித்தது
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி கந்தசாமி குப்தா தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். என்ஜினீயரான இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அவர் காபி போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு, சமையல் அறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் சமையல் அறையை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் இது குறித்து தர்மபுரி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Next Story