தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து


தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து
x
திருப்பூர்


உடுமலை பழனி ரோட்டில் ஐஸ்வர்யாநகர் பகுதியில் உள்ள கட்டிடத்தின் மாடியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவில் திடீர் என்று தீப்பிடித்தது. உடனடியாக ஊழியர்கள் உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஜன்னல் வழியாக தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஏ.சி, யு.பி.எஸ். மற்றும் மின் சாதனப்பொருட்கள் என சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. நிதி நிறுவன ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தததாலும், தீயணைப்புத்துறையினர் உடனடியாக விரைந்து வந்ததாலும் அருகிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த உடுமலை போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story