வைக்கோல் தீயில் எரிந்து சேதம்


வைக்கோல் தீயில் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வைக்கோல் தீயில் எரிந்து சேதமானது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா கண்ணன் புஞ்சை கிராமத்தில் வைக்கோல் படப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் வைக்கோல் தீயில் எரிந்து சேதமானது.

இதேபோல் பெருமானேந்தல் கிராமத்தில் ஒரு வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை தீயணைப்புத் துறையினர் உயிருடன் பிடித்து அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டு சென்றனர். தொண்டி அருகே உள்ள நாகனேந்தல் கிராமத்தில் ஒரு மரத்தில் கதம்ப வண்டுகள் கூடுகட்டி இருந்தது. மேலும், அப்பகுதியில் சென்ற பொதுமக்களை கதம்ப வண்டுகள் கொட்டியதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று தீ மூலம் மரத்தில் கூடு கட்டி இருந்த கதம்ப வண்டுகளை அகற்றினர். இதேபோல் தேவன்கோட்டை கிராமத்தில் ஒரு வீட்டில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகளையும் தீயணைப்பு வீரரகள் அகற்றினர்.


Next Story