வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து சேதம்


வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

யு.பி.எஸ். பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

யு.பி.எஸ். பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது.

தீ விபத்து

சிவஙக்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட உடன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவருடைய மனைவி செல்வமணி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். முத்துக்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். செல்வமணி தனது குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வமணி மற்றும் அவருடைய மகள்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டில் இருந்த யு.பி.எஸ். பேட்டரியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. சத்தம் கேட்டு எழுந்து பார்த்த செல்வமணி வீட்டில் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பொருட்கள் சேதம்

இதையடுத்து அவர் தனது மகள்களை உடனடியாக அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பிரிட்ஜ், பீரோ, கட்டில் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை தீயில் எரிந்து கருகியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story