வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து சேதம்


வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து சேதம்
x

வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

சேலம்

ஆத்தூர்:

ஆத்தூர் அருகே கோவிந்த வலசு பாளையம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் தன்னுடைய மனைவியுடன் நேற்று காலையில் விவசாய வேலைக்கு சென்று விட்டார். மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பிரிட்ஜ், கட்டில், ெமத்தை, மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை எரிந்து சேதமாயின. தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து பற்றி அறிந்தவுடன் துரைராஜ், அவருடைய மனைவி வீட்டுக்கு விரைந்து வந்தனர். தீயில் எரிந்த பொருட்களை பார்த்து வேதனை அடைந்தனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மல்லியகரை போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story