தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்


தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
x
தினத்தந்தி 19 April 2023 12:45 AM IST (Updated: 19 April 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

திருவாரூர்

குடவாசலில் உள்ள பஸ் நிலையத்தில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீத்தொண்டு நாளையொட்டி தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு குடவாசல் போலீஸ் கருணாநிதி தலைமை தாங்கினார். தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ஜோதிபாசு கோடை காலத்தில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தார். அப்போது தீ விபத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.


Next Story