காவலாளி வீட்டில் தீ விபத்து


காவலாளி வீட்டில் தீ விபத்து
x

ராணிப்பேட்டை அருகே காவலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு நகை, பணம் எரிந்து சாம்பலானது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 73). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராணி, துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கிறார். நேற்று காலை கந்தசாமியின் வீட்டில் திடீரென்று தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த தீவிபத்தில் கந்தசாமி வீட்டில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.6,000 எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story