தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து


தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
x

சிவகாசியில் தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் மகேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம்போல் தீப்பெட்டி உற்பத்தியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அப்போது மெழுகு அறைக்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே ஆலை நிர்வாகம் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story