தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து


தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
x

சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளிகள் உயிர் தப்பினர்.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளிகள் உயிர் தப்பினர்.

தீப்பெட்டி ெதாழிற்சாலை

சாத்தூர்-மன்னார்கோட்டை சாலையில் சிவகாசியை சேர்ந்த அருணாச்சலம் மகன் மகேஸ்வரனுக்கு சொந்தமான எந்திரத்தால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று மதிய வேளையில் பணியாளர்கள் அனைவரும் உணவு அருந்த சென்றனர். அப்போது தீப்பெட்டி தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தீப்பெட்டி குச்சிகள் தயார் செய்வதற்கு பயன்படுத்திய பழைய மரக்கட்டைகள், சக்கைகள் மற்றும் ராக்குகளை சேமித்து வைத்துள்ளனர்.

தீ விபத்து

அதில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பழைய பயன்பாடு இல்லாத பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இந்த தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் உயிர்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ½ மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். இதுகுறித்து அம்மாபட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story