தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து


தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
x

குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

வேலூர்

குடியாத்தம் அருகே தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்.

தீ விபத்து

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியில் தனியார் தீப்பட்டி தொழிற்சாலை உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். காலை 9 மணி அளவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் மருந்து தோய்ந்த தீக்குச்சி மூட்டைகளை கையாண்ட போது எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றியது. அப்போது ஒரு சிலரே பணியில் இருந்தனர். பணியில் இருந்த மேற்பார்வையாளர் ரவி (வயது 40) மூட்டைகளை அப்புறப்படுத்த முயன்றார்.

அப்போது அவருக்கு சிறு காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பக்கத்து அறையில் தயார் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது உடனடியாக தீயை அணைத்ததால் பக்கத்து அறைக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

பொருட்கள் நாசம்

இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ். தனஞ்செயன், சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், ஒன்றியக் குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாத், கிராம நிர்வாக அலுவலர் ரகு உள்ளிட்டோர் விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு தீ விபத்து குறித்து கேட்டறிந்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பூபதிராஜா, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏரிந்து நாசமாயின.


Next Story