நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து


நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது

ராமநாதபுரம்

பரமக்குடி

பரமக்குடி நகராட்சி சார்பில் அண்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட ராம் நகர் அருகில் குப்பை கிடங்கு உள்ளது. பரமக்குடியில் உள்ள வார்டுகளுக்குட்பட்ட பகுதிகளில் தினமும் அள்ளப்படும் குப்பைகளை இந்த குப்பை கிடங்கில் தரம் பிரிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக தேக்கி வைக்கப்பட்ட குப்பை மலை போல் குவிந்து கிடந்தது. இந்நிலையில் திடீரென அந்த குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பரமக்குடி தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்று அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.


Next Story