ஓட்டலில் தீ விபத்து


ஓட்டலில் தீ விபத்து
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டுவில் ஓட்டலில் தீப்பிடித்தது.

தேனி

கடமலைக்குண்டுவை சேர்ந்தவர் கரிகாலன். இவருக்கு அதே பகுதியில் ஓட்டல் உள்ளது. நேற்று காலையில் வழக்கம்போல் ஓட்டல் திறக்கப்பட்டது. பின்னர் மதியம் 2 மணி அளவில் ஓட்டலை மூடிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதியம் 3 மணியளவில் ஓட்டலில் தீப்பிடித்தது. அந்த தீ ஓட்டலின் கட்டிடத்தின் மேற்பகுதி வரை கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அப்பகுதி மக்கள் கடமலைக்குண்டு தீயணைப்புநிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஓட்டலில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story