மரக்கடையில் தீ விபத்து
மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
ராமநாதபுரம்
பரமக்குடி,
பரமக்குடி அனுமார் கோவில் அருகில் மரக்கடை நடத்தி வருபவர் ரவிச்சந்திரன். இங்கு வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல், சேர்கள் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் அதிகாலை மர குடோனில் இருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. பின்னர் தீ மளமளவென எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சத்திற்கும் மேலான மர பொருட்கள் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து பரமக்குடி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story