தொழிலாளி வீட்டில் தீ விபத்து


தொழிலாளி வீட்டில் தீ விபத்து
x

தொழிலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.ராமச்சந்திராபுரம் சாலியர் தெற்கு தெருவில் காசி ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கைத்தறி நெசவு கூடம் வைத்துள்ளார். காசி ராமலிங்கம், தனது மனைவியுடன் வெளியூர் சென்றிருந்தார். இந்தநிலையில் இவரது வீட்டில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீடு மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story