தொழிலாளி வீட்டில் தீ விபத்து


தொழிலாளி வீட்டில் தீ விபத்து
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் தொழிலாளி வீட்டில் தீ விபத்து

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அய்யப்பன் (வயது 35). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் இவருடைய கூரை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அய்யப்பன் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். அப்போத காற்று வேகமாக வீசவே தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது.

பின்னர் இது பற்றிய தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதில் வீட்டில் இருந்த டி.வி., கட்டில் உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்களும், துணிமணிகளும் மற்றும் அய்யப்பன் வைத்திருந்த ரூ.3,500 ரொக்கமும் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு சுமார் ரூ.1 லட்சமாகும். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Next Story