சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் குடோனில் தீ விபத்து


சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் குடோனில் தீ விபத்து
x

சேலத்தில் வீட்டு உபயோக பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின.

சேலம்

வீட்டு உபயோக பொருட்கள்

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் முதல் அக்ரஹாரம் பகுதியில் மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். அதாவது கீழ் தளத்தில் கடையும், முதல் மற்றும் 2-வது தளங்களில் வீட்டு உபயோக பொருட்கள் வைக்கும் குடோனாகவும் பயன்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் 2-வது மாடியில் உள்ள குடோனில் நேற்று இரவு திடீரென்று புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து கடை முழுவதும் கொளுந்து விட்டு தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் கீழ் தளத்திற்கு வந்து சங்கரிடம் கூறியுள்ளனர். அவர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

போராடி தீயை அணைத்தனர்

அதன்பேரில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீர் பீய்ச்சியடித்து போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்து பல பொருட்கள் எரிந்து நாசமாகின.

இது குறித்து சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story