கோவில்பட்டி லாரி ஒர்க் ஷாப்பில் தீவிபத்து
கோவில்பட்டி லாரி ஒர்க் ஷாப்பில் தீவிபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிருஷ்ணாநகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் கருப்பசாமி (வயது 39). இவர் கூடுதல் பஸ் நிலையம் அருகில் சுபா நகரில் லாரி ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று பகலில் ஒர்க் ஷாப் சுற்று பகுதியில் கிடந்த சருகுகள், குப்பைகளில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ ஒர்க்ஷாப்பிற்கு உள்ளேயும் பரவி எரிந்தது. இதில் உள்ளே இருந்த உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வெளியே ஓடி தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீ விபத்தில் ஒர்க் ஷாப்பில் இருந்த 2 கம்பரசர் எந்திரங்கள், உபகரணங்கள், செட்டுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து ஒர்க்ஷாப் உரிமையாளர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.