பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை கடையில் தீ விபத்து


பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை கடையில் தீ விபத்து
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரத்தில் பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவர் நெல்லை- தென்காசி சாலையில், பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் பழைய மோட்டார் சைக்கிள்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரண்டை தீயணைப்பு படையினர், மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ்ஆனந்த், நிலைய அலுவலர் முத்துச்செல்வம் மற்றும் வீரர்கள் விரைந்து வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் கடையில் விற்பனைக்காக நிறுத்தப்பட்டிருந்த சுமார் ரூ.3½ லட்சம் மதிப்பிலான 11 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story