தீ தொண்டு நாள் நிகழ்ச்சி


தீ தொண்டு நாள் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணியின் போது உயிரிழந்த அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய வளாகம், பஸ் நிலையம், பீச் ரோடு உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் "தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.


Next Story