தீ விபத்தை கட்டுப்படுத்த செயல்விளக்கம்
தீ விபத்தை கட்டுப்படுத்த செயல்விளக்கம்
குன்னூர்
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது பகலில் கடும் வெயிலும், இரவில் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஆங்காங்கே தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவமனைகள், அலுவலகங்கள், கல்வி நீறுவனங்கள் போன்றவற்றில் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக அணைக்கும் முறை குறித்து தீயணைப்பு துறையினர் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து வருகிறார்கள். மேலும் தீயணைப்பு கருவிகளை தயாராக வைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
அதன்படி குன்னூர் அருகே உள்ள எடப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் தீ விபத்து ஏற்ப்பட்டால் எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. பொதுமக்களை கட்டிடங்களில் இருந்து வெளியேற்றுவது, தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது என்பது போன்ற செயல்முறை விளக்கங்கள் தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது. மேலும் வாளி, மணல், தீயணைப்பு சிலிண்டர் போன்றவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.