கொசுவர்த்தியை பற்ற வைத்து தூங்கியபோது உடலில் தீப்பிடித்து முதியவர் பலி
தர்மபுரி
ஏரியூர்:
ஏரியூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் தர்மன் (வயது 70). கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 14-ந் தேதி இரவு வீட்டுக்கு வெளியே கொசுவர்த்தியை பற்ற வைத்து விட்டு, மரக்கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கொசுவர்த்தியில் இருந்த தீ, கட்டிலில் பிடித்து பரவியது. இதில் தர்மன் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சமப்வம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story