தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x

ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

மயிலாடுதுறை

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே ஆக்கூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் தலைமை தாங்கினார். டாக்டர் சங்கீதா, வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலை வைத்தனர். இதில் பூம்புகார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழு நிலைய அதிகாரி ரமேஷ் கலந்து கொண்டு தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீ தடுப்பு முறைகள் குறித்து செயல் முறை விளக்கம் அளித்தார். மேலும் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ தடுப்பு குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதில் தரங்கம்பாடி சிறப்பு நிலைய அலுவலர் அருள்மொழி மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story