அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி விழா
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. இதையொட்டி பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி விழா நடந்தது. இதையொட்டி பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
தீ மிதி விழா
கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த 17-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மனுக்கு தாலாட்டும், விடாய் உற்சவமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் தீமிதி விழா நடந்தது. இதில், மயானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவரை சுமந்து வந்த பூசாரிகள், குண்டத்தில் இறங்கினர்.
இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன்
மேலும் ஏராளமான பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை அம்மையப்பன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.