தனியார் ஷூ கம்பெனியில் தீ விபத்து


தனியார் ஷூ கம்பெனியில் தீ விபத்து
x

ஆம்பூர் அருகே தனியார் ஷூ கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்ன வரிக்கம் பகுதியில் தனியார் ஷூ கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 7 மணி அளவில் தொழிற்சாலையில் உள்ள குடோனில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து தொழிற்சாலையில் இருந்து வெளியே சென்றனர். இதைத்தொடர்ந்து தீ குடோன் முழுவதும் பற்றி எரிந்தது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் உமராபாத் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீ கொழுந்து விட்டு எறிவதால் 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.


Next Story