பெண்கள் அழகு நிலையத்தில் தீ விபத்து
பெண்கள் அழகு நிலையத்தில் தீ விபத்து
அருள்புரம்
பல்லடம் அருகே சின்னக்கரையில் மகேந்திரன் என்பவர் ஸ்டைல் குரு சலூன் என்ற கடையை நடத்தி வருகிறார். இதில் புதிதாக பெண்களுக்கான அழகு நிலையம் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஆறு மணி அளவில் திடீரென கடையின் உட்புறத்தில் இருந்து புகை வருவதை கண்டு அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அழகு நிலையத்தில் எரிந்து கொண்டிருந்த தீயினை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் அருகில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின் கசிவு காரணமாக அழகு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது. புதிதாக திறக்கப்பட உள்ள அழகு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.