அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து


அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து
x
தினத்தந்தி 4 July 2023 1:15 AM IST (Updated: 4 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே தனியாா் அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

விருதுநகர்

சாத்தூர் அருகே தனியாா் அட்டை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

அட்டை தொழிற்சாலை

சாத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை சாத்தூர் அருகே பெத்துரெட்டிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அட்டை தொழிற்சாலையில் சுமார் 150 பேர் பணியாற்று வரும் நிலையில் கழிவு பேப்பர்களை கொண்டு எந்திரம் மூலம் அட்டைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அட்டை தயாரிக்கும் கழிவு பேப்பர்களை வைத்திருக்கும் பகுதியில் திடீரென தீப்பற்றியது. மேலும் பலத்த காற்று காரணமாக தீ மள மளவென பரவி அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது.

விசாரணை

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், ஜே.சி.பி. எந்திரம் மூலம் மீட்பு பணிகளும் நடைபெற்றது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்தும் சேத மதிப்பு குறித்தும் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story