காய்ந்து கிடந்த அமலைச்செடிகளில் தீ


காய்ந்து கிடந்த அமலைச்செடிகளில் தீ
x

பழனி வையாபுரிகுளத்தில் காய்ந்து கிடந்த அமலைச்செடிகளில் தீ விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல்

பழனி காரமடை அருகே உடுமலை சாலையில் வனத்துறைக்கு சொந்தமான மருத்துவ மரப்பூங்கா உள்ளது. இங்கு மூலிகை செடிகள், மரங்கள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பூங்கா அருகே உள்ள வையாபுரிக்குளம் பகுதியில் காய்ந்து கிடந்த அமலை செடிகளில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். அந்த தீ வேகமாக பரவி கரை பகுதியில் இருந்த செடிகளில் பற்றி எரிந்தது. இதனை பார்த்த வனத்துறை ஊழியர்கள் தீ பூங்காவுக்குள் பரவாமல் இருக்க உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர்.

மேலும் தீ விபத்து குறித்து தகவலறிந்த பழனி தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான படையினர் சம்பவ இடத்துக்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். நல்ல வேளையாக விரைந்து தீ அணைக்கப்பட்டதால் பூங்காவில் இருந்த செடிகள், மரங்கள் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும் பூங்கா பகுதியில் கிடந்த காய்ந்த சருகுகள், செடிகள் தீயில் கருகின.


Next Story