இரும்பு கடையில் தீ


இரும்பு கடையில் தீ
x

திண்டுக்கல்லில், பழைய இரும்பு கடை தீப்பிடித்து எரிந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர், வத்தலக்குண்டு சாலையில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று மாலையில் கடையில் உள்ள இரும்புகளை கியாஸ் வெல்டிங் முறையில் துண்டாக்கும் பணியில் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அதில் இருந்து வெளியேறிய தீப்பொறிகள் பறந்து, அருகில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு மற்றும் தெர்மாக்கோல் சீட்டுகள் ஆகியவற்றில் பட்டு தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் பதறியடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.

இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி இரும்பு கடையில் பற்றி எரிந்த தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் குளிர்சாதனப்பெட்டிகளின் கழிவு பொருட்களான பஞ்சு, தெர்மாக்கோல் ஆகியவை எரிந்து நாசமானது.


Next Story