பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ


பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ
x

பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை

இலுப்பூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் இலுப்பூர் சத்தியநாதபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் மலை போன்று குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குப்பை கிடங்கில் இருந்து நேற்று மதியம் திடீரென கரும்புகை வெளியேறியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story