தனியார் வங்கியில் தீ விபத்து
தனியார் வங்கியில் தீ விபத்து
திருப்பூர்
காங்கயம்
காங்கயம் பஸ் நிலையம் அருகே திருப்பூர் சாலையில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் இந்த வங்கியின் கீழ் தளத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் இருந்து கரும்புகை வெளிவந்தது. அங்கு புகை மண்டலம் உருவானதால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் மேல் தளத்தில் செயல்பட்டு வந்த வங்கிக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story