முள்ளிமலை பொத்தையில் தீ
கடையம் அருகே முள்ளிமலை பொத்தையில் தீ எரிகிறது.
தென்காசி
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள முள்ளிமலை பொத்தையில் மிளா, கரடி, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த மலையில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் அங்குள்ள புற்கள் காய்ந்த நிலையில் இருப்பதாலும், காற்றின் வேகம் அதிகரிப்பதாலும் தீ வேகமாக பரவி மளமளவென பிடித்து கொழுந்துவிட்டு எரிகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கடையம் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த தீயில் மலையில் உள்ள அரிய வகை மரம், செடிகள் எரிந்து இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story