பட்டாசு மூலப்பொருள் அரைக்கும் இடத்தில் தீ விபத்து


பட்டாசு மூலப்பொருள் அரைக்கும் இடத்தில் தீ விபத்து
x

பட்டாசு மூலப்பொருள் அரைக்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி ரோட்டில் பட்டாசுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரைக்கும் அரவை நிலையம் உள்ளது. இங்கு பட்டாசு தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களை தொழிலாளர்கள் நேற்று மாலை அரைத்துக்கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடி மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அரவை நிலையத்தில் இருந்த மூலப்பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே பதற்றம் அடைந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறி, சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி வெங்கடேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேதிப்பொருட்களை கலந்த தண்ணீரை கொண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 1 மணி நேரத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இதில் மூலப்பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story