ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையில் 'தீ'
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மலையில் ‘தீ’ விபத்து ஏற்பட்டது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூவரை வென்றான் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் மலைக்கொழுந்தீஸ்வரர் என அழைக்கப்படும் பழமையான சிவன் கோவில் மலை மீது உள்ளது. இந்த மலைக்கு பின்னால் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் தப்பி ஓடுகின்றன. இதுகுறித்து வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story