போடிமெட்டு மலைப்பாதையில் தீ
ேபாடிமெட்டு மலைப்பாதையில் தீ விபத்து ஏற்பட்டது.
தேனி
போடி அருகே முந்தல் மலை அடிவாரத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தூரத்தில் போடிமெட்டு மலைப்பாதை செல்கிறது. இதில் 17 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தமிழக-கேரள எல்லையை இணைக்கும் முக்கிய பகுதியாக இந்த போடி மெட்டு பாதை உள்ளதால் இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது.
இந்நிலையில் நேற்று காலை 3, 4, 5-வது கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரம் இருந்த செடிகளில் தீப்பற்றி எரிந்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மள, மளவென பற்றி அருகே உள்ள மரங்களில் பற்றியது. இதனால் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதன்காரணமாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் தீயை அணைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story