பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாலையில் வேன் தீப்பிடித்ததால் பரபரப்பு
தர்மபுரி
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 63). விவசாயி. இவர் அந்த பகுதியில் ஐயப்பன், கருப்பசாமி கோவில் கட்டி வருகிறார். நேற்று மதியம் கருணாநிதி தனது வேனில் ஏ.பள்ளிப்பட்டி சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தார். வழியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் அடித்து விட்டு, சென்றபோது வேனின் இடது பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து உடனடியாக அவர் சாலையில் வேனை நிறுத்தினார். அப்போது வேனில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கருணாநிதி தண்ணீர் மற்றும் தீயணைப்பு கருவிகளை கொண்டு வேனில் பற்றிய தீயை அணைத்தார். சாலையின் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story