மலையாம்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்க முகாம்


மலையாம்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்க முகாம்
x
திருவண்ணாமலை

ஆரணி

மலையாம்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்க முகாம் நடந்தது.

ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரணி தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தீ விபத்து மற்றும் எதிர்வரும் மழை காலங்களில் இடர்பாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்த செயல் விளக்க ஒத்திகை நடந்தது.

பள்ளி மேலாண்மை குழு தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான கவுரி தாமோதரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சா.வசந்தா லட்சுமி வரவேற்றார். நிகழ்ச்சியில் ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படைவீரர்கள் தீ விபத்து தடுப்புகள் குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மேலும் மழைக் காலங்களில் இடர்பாடுகளில் சிக்கி தவிப்பவர்களை மீட்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.

ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் டி. பாரதி, சவுந்தரி, ஆர்.சாந்தி, ஆர்.பிரேமா, ஏ.மதுமதி மற்றும் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story