திருக்கோவிலூரில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருக்கோவிலூரில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சந்தப்பேட்டையில் உள்ள ஶ்ரீராம் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது, நோயாளிகளை எவ்வாறு வெளியற்றுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டது. இதில் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவமனை நிர்வாகி டாக்டர் பாலமுருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story