அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
கலசபாக்கம்
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில் துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மல்லவாடி ஊராட்சியில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் தலைமை தாங்கினார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா வரவேற்றார்.
திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன் தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு விளக்கி கூறினார்.
மேலும், தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது சிலிண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகள் கையாள்வது குறித்து விரிவான செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகையின் போது எவ்வாறு பட்டாசுகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் மேற்பார்வையாளர்கள் ரேணுகா, மகேஸ்வரி, பவுனும்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.