தொழிலாளர்களுக்கு தீத்தடுப்பு செயல்விளக்கம்
தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு தீத்தடுப்பு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நீலகிரி
கூடலூர்,
தீயணைப்புத்துறை சார்பில், தீ தொண்டு வாரத்தையொட்டி கூடலூர் செம்பாலா தேயிலை தொழிற்சாலை பணியாளர்களுக்கு தீத்தடுப்பு செயல்முறை விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இதற்கு கூடலூர் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமை தாங்கினார். தொடர்ந்து தீ விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கப்பட்டது. பின்னர் ஆபத்தான காலங்களில் தீயை கட்டுப்படுத்துவது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் தொழிற்சாலை அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story