அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை


அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை
x

அரசு பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

அரியலூர்

ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் வாரியங்காவல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக்காண்பிக்கப்பட்டது. மேலும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது. இதில் தற்செயலாக வீடுகளில் தீவிபத்து ஏற்படுவதும் உண்டு, அப்போது எண்ணெயினால் ஏற்படும் தீயை எவ்வாறு அணைக்க வேண்டும். சமையல் எரிவாயுவினால் ஏற்படும் கசிவு காரணமாக ஏற்படும் தீயை எவ்வாறு அணைக்க வேண்டும் என்பவை குறித்து மாணவ-மாணவிகளுக்கு ஒத்திகை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story