பெருந்துறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து விடிய விடிய தவித்த மூதாட்டி- தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்


பெருந்துறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து விடிய விடிய தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை அருகே 80 அடி ஆழ கிணற்றில் குதித்து விடிய விடிய தவித்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

மூதாட்டி

பெருந்துறை சீனாபுரத்தை அடுத்துள்ள வாணிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 65). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இந்தநிலையி்ல் நேற்று முன்தினம் இரவு அவருடைய வீட்டிற்கு எதிரே இருந்த 80 அடி ஆழ கிணற்றுக்குள் திடீரென சரஸ்வதி குதித்து விட்டார்.

தண்ணீர் இல்லாமல், ஒரு அடி உயரத்திற்கு சேறும், சகதியுமாக கிணற்றுக்குள் இருந்ததால் சரஸ்வதி உயிர் தப்பினார். இரவு நேரம் என்பதால் இவர் கிணற்றுக்குள் குதித்தது யாருக்கும் தெரியவில்லை. இதனால் விடிய விடிய சேற்றுக்குள்ளேயே சரஸ்வதி உட்கார்ந்து இருந்தார்.

கால்களில் முறிவு

இந்தநிலையில் நேற்று காலை கிணற்றுக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாக சென்ற பச்சியப்பன் என்பவர் சத்தம் கேட்டு கிணற்றுக்குள் எட்டிப்பார்த்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் சரஸ்வதி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றுக்குள் விழுந்து கிடந்த சரஸ்வதியை கயிறு கட்டி மேலே கொண்டு வந்தார்கள். கிணற்றுக்குள் விழுந்ததில் சரஸ்வதியின் கால்களில் முறிவு ஏற்பட்டு இருந்தது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story