தீக்குளித்து தொழிலாளி தற்கொலை


தீக்குளித்து தொழிலாளி தற்கொலை
x

நடுவீரப்பட்டில் தீக்குளித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நடுவீரப்பட்டு தட்டாரசாவடியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது 44)தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி விஜயாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் கணவரிடம் கோபித்து கொண்டு விஜயா தனது தாய் வீட்டுக்கு சென்றார். இதனால் மனமுடைந்த கணேசமூர்த்தி வீட்டில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story