பாதுகாப்பற்ற நிலையில் பட்டாசு பெட்டிகள்


பாதுகாப்பற்ற நிலையில் பட்டாசு பெட்டிகள்
x

பாதுகாப்பற்ற நிலையில் பட்டாசு பெட்டிகள் வைத்த 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு குடோன் அருகில் பட்டாசு பெட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதிகாரிகளின் சோதனைக்கு பயந்த யாரோ இதனை கொண்டு வந்து அங்கு போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்த கிராம நிர்வாக அலுவலர் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி பாதுகாப்பு இல்லாமல் பட்டாசு பெட்டிகளை வைத்திருந்ததாக ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story