பட்டாசு- தீப்பெட்டி தொழிலாளர் நலவாரிய ஆலோசனை கூட்டம்


பட்டாசு- தீப்பெட்டி தொழிலாளர் நலவாரிய ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பட்டாசு- தீப்பெட்டி தொழிலாளர் நலவாரிய ஆலோசனை கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலில் வேலை பார்க்கும் பணியாளர் ஆண்டு ஒன்றுக்கு ரூ.200 பங்களிப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் எம்.பரமசிவம், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர்.எஸ்.சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் துணை தலைவர் ராஜூ முன்னிலை வகித்தார். நேஷனல் சிறிய தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் வரவேற்றார். தொழிலாளர் துறை நெல்லை இணை ஆணையர் ப.சுமதி, தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் நா.முருகப் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு நலவாரியத்தின் உறுப்பினர்களுக்கான உதவிகள், பலன்கள் பற்றி எடுத்துரைத்தனா். பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் நலவாரியத்திற்கு தங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு தொகையை காசோலையாக நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதியிடம் வழங்கினார்கள். தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story