புத்தக கடையில் பட்டாசு விற்றவர் கைது


புத்தக கடையில் பட்டாசு விற்றவர் கைது
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

புத்தக கடையில் பட்டாசு விற்றவர் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி மற்றும் போலீசார் திண்டிவனம் ஆர்.எஸ் பிள்ளை வீதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் கந்தன் (வயது 52) என்பவர் திண்டிவனம் நேரு வீதியில் வைத்திருக்கும் புத்தகக் கடையில் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கு அரசின் உரிய உரிமம் இல்லாமல் பட்டாசுகள் மற்றும் நாட்டுவெடிக் இருந்தது. இதையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


Next Story