பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்
பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சுப்பிரமணியபுரத்தில் உள்ள பட்டாசு கடை பின்புறம் தகரசெட்டில் அனுமதியின்றி பட்டாசு பண்டல்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தகரசெட்டை சோதனை செய்த போது உரிமம் இல்லாத 75 பட்டாசு பண்டல்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்து தகர செட் உரிமையாளர் பூசாரி நாயக்கன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணசாமியை (வயது 34) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story