பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்
பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் எரிச்சநத்தம்-அழகாபுரி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ஒரு தகர செட்டில் சில பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த பெட்டிகளை சோதனை செய்த போது அதில் சட்டி வெடி, குயில்வெடி, சரஸ்வதி வெடி, சின்னசரம் என 11 பெட்டிகளில் பட்டாசுகள் இருந்தது. உரிய அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்ததாக சிவகாசி உசேன் காலனியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பெட்டி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story